Posts

உறுதியான பொருளாதார செயற்பாடுகளை எதிர்ப்பார்க்கும் மக்கள்.

  வழமையாக உளரிக் கொட்டும் ஒரு அரை லூசு அமைச்சர் தற்போது மீண்டும் ஒரு அற்புதமான கருத்தை தெரிவித்துள்ளார் . இன்றைய காலகட்டத்தில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து ஐந்து வீதம் விஷேட வரி அறவிடப்பட வேண்டும் என்பதுதான் அவர் முன்வைத்துள்ள யோசனை . அவரைப் பொறுத்தமட்டில் வழமைப் போல் இதை மிக இலகுவாக சொல்லி விடலாம் . ஆனால் நடைமுறையில் அது ஒரு தனி மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை சற்று யோசிக்க வேண்டும் . 2500 ரூபாவில் காலம் கழிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து அமைச்சர் இன்னமும் மாறவில்லை என்று நினைக்கிறேன் . ஒரு லட்சம் ரூபா சம்பளம் என்பது சாதாரண ஒரு மனிதனைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய ஒரு விடயம் . இலங்கையின் இன்றைய நிலையில் அது சாதாரண விடயம் அல்ல . ஒரு லட்சம் ரூபா சம்பளம் பெறும் ஒருவரைக் கேட்டுப் பார்த்தால் தெரியும் அதற்காக அவர் எந்தளவு உழைப்பை தான் சார்ந்த நிறுவனத்துக்கு வழங்குகின்றார் என்று . அவரை முழுமையாகக் கசக்கிப் பிழிந்து விட்டுத்தான் அந்தத் தொகையை கையி
Recent posts